அடுத்து எப்போது முழு சந்திர கிரகணம் ஏற்படும்?

சந்திர கிரகணம் என்பது பூமியின் பின்னால் நிலவு கடந்து செல்லும்போது பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின்மீது படுவதில் இருந்து மறைந்து விடுவதால் உண்டாகும்.

பூமியின் முழு நிழல் பகுதியின் உட்புறம் நிலா முழுமையாக நுழைந்து கடந்து சென்றால் அது முழு சந்திர கிரகணம் எனப்படும்.

அப்போது சந்திரனின் ஒளிவெகுவாக குறையும். பூமியின் நிழல் பகுதியில் சந்திரன் இருந்தாலும் பூமியின் வளிமண்டலத்தில் பட்டு சிதறடிக்கப்பட்டப்பின் எஞ்சிய செந்நிற ஒளி நிலவின்மீது படியும். எனவே, நிலவு செந்நிறமாக தோற்றமளிக்கும்.

இதுபோன்ற சந்திரகிரகணம் நேற்று இரவு 11.54 மணிக்கு தொடங்கி அதிகாலை 03.49 மணிவரை நிகழ்ந்தது. முழு சந்திர கிரகணம் அதிகாலை 1 மணிக்கு தொடங்கி 2.43 மணிக்கு நிறைவடைந்தது. மொத்தம் 103 நிமிடங்கள் முழு சந்திரகிரகணம் நிகழ்ந்தது.

இது தொடர்பாக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குனர் சௌந்திரராஜ பெருமாள் கூறும்போது, “சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பார்ப்பதால் எந்த தீங்கும் ஏற்படாது. என்பதால் பொதுமக்கள் கண்ணாலே கண்டு ரசித்தனர்.

தொலைநோக்கி மூலமும் பலர் கண்டு ரசித்தனர். இனி இதுபோன்ற நீண்ட நேரம் நிகழும் முழு சந்திர கிரகணம் 2029 ஜூன் 25-ஆம் தேதிதான் நிகழும் அதுவும் 102 நிமிடங்கள் நீடிக்கும்” என்றார்.

பொதுவாக கிரகணக் காலங்களில் கர்பிணிப் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும், கிரகணத்தில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுகள் சிசுவை பாதிக்கும் என்றும், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது எனவும் பெரியவர்கள் சொல்வது வழக்கம்.

More News >>