தமிழ் சினிமா வரலாற்றில் சாதனை படைத்த விவேகம்!
தமிழ் சினிமா வரலாற்றில் 'விவேகம்' படைத்த சாதனை!!!
தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து அனைத்து இணையதள சாதனைகளையும் அடித்து நொறுக்கிய நிலையில் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக அஜித், சிறுத்தை சிவா உள்பட படக்குழுவினர் மீண்டும் ஐரோப்பா சென்றுள்ளனர்.இந்த நிலையில் இன்று அதிகாலை 12 மணிக்கு VR டெக்னலஜியில் 'விவேகம்' டீசர் ரிலீஸ் ஆகியுள்ளது. விர்சுவல் ரியாலிட்டி (Virtual Reality) என்று கூறப்படும் VR டெக்னலஜியில் தற்போது அதிகளவில் வீடியோக்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அஜித்தின் 'விவேகம்' திரைப்படத்தின் பிரத்யேக டீசரும் இந்த டெக்னாலஜியில் வெளிவந்திருப்பது அஜித் ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமைந்துள்ளது. இந்த டெக்னாலஜியில் வெளிவரும் முதல் தமிழ்ப்பட 3D மோஷன் டீசர் இதுதான் என்பது குறிப்பிடதக்கது. 360டிகிரி கோணத்தில் 4K தரத்தில் அமைந்துள்ள இந்த வீடியோ அஜித் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமாக தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது