ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நீக்கம்: அதிரடி நடவடிக்கை

ரஜினி மக்கள் மன்றத்தில் தேனி மாவட்ட  நிர்வாகிகள்  3 பேரை பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ரஜினிக்கு தமிழ்நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத ரசிகர் மன்றங்கள் அனைத்தும் “ரஜினி மக்கள் மன்றம்“ என்று மாற்றம் செய்யப்பட்டன.   ரஜினி மக்கள் மன்றத்துக்கு கடந்த 6 மாதமாக உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தீவிரமாக நடந்தது. அந்த உறுப்பினர்களுக்கு உடனுக்குடன் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன. அதோடு ஒவ்வொரு கிளை அமைப்பிலும் உள்ள உறுப்பினர்கள் விவரம் கணினியில் பதிவு செய்யப்பட்டன.   இந்த உறுப்பினர்களைக் கொண்டு மாவட்டந்தோறும் ரஜினி மக்கள் மன்றத்துக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்ட நிர்வாகிகளும் நியமனம் செய்யப்பட்டனர்.   அவர்களுள் ஒருவரான தேனி மாவட்ட மகளிர் அணி செயலாளர் கொடுத்த புகாரின் பேரில் ஒழுங்கு நடவடிக்கை குழு மாவட்ட செயலாளர் மற்றும் இணை செயலாளர் அவர்கள் பொறுப்பிலிருந்து விடுவித்து அதற்கு பதிலாக மாற்று செயலாளர்களை நியமித்துள்ளனர். அதேபோல் போடி நகர செயலாளர் ரஜினி மக்கள் மன்ற விதிமுறைகளை மீறி செயல்பட்ட தாகக் கூறி அவரையும் அனைத்து பொறுப்பிலிருந்து விடுவித்துள்ளனர்.   ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவரும் மற்றும் மாநில அமைப்புச் செயலாளருமான  இளவரசன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
More News >>