கனமழை, கடும் வெயிலை தொடர்ந்து ஜப்பானை தாக்கிய ஜாங்டரி புயல்

கனமழை, கடும் வெயிலை தொடர்ந்து புயல் ஜப்பானை தாக்கியது. இதில், அனைத்து சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜப்பானில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனமழை கொட்டித்தீர்த்தது. இதில், ஜப்பானில் பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் சூழ்ந்தன. நூற்றுக்கணக்கானோர் வெள்ளத்தில் சிக்கி பலியாகினர்.

இதைதொடர்ந்து, கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்நாட்டு மக்களை கடும் வெயில் சுட்டெரித்தது. இதில், வெளியின் தாக்கம் தாங்க முடியாமல் பலர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், ஜப்பான் நாட்டில் ஜாங்டரி என்ற புயல் நேற்று தாக்கியது. இதில், டோக்கியோ உள்பட பல்வேறு நகரங்களில் பலத்த காற்றுடன் சூறாவளி ஏற்பட்டது. இத்துடன் பலத்த மழையும் பெய்தது. இதனால், அந்நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

மேலும், இதன் எதிரொலியாக விமான சேவைகள், ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதால் ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின. சூகயாமா, ஹிரோஷிமா மாகாணங்களில் பலத்த மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக, ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஷோபரா நகரில் இருந்து 36 ஆயிரம் மக்கள் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளன. மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.

More News >>