குடியுரிமை வரைவு- அசாமில் இன்று வெளியானது!

அசாம் நாட்டில் இன்று இறுதி குடியுரிமை வரைவு வெளியிடப்பட்டது.

முதல் குடியுரிமை வெளியிடப்பட்டு 7 மாதங்கள் கழித்து இந்த வரைவு வெளியிடப்பட்டுள்ளது. 1.9 கோடி பேரின் பெயர் முதல் வரைவில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், இரண்டாவது வரைவின் அடிப்படையில் யாரும் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்றும் அவர்களின் கருத்து கேட்டறியப்படும் என்று அரசு தரப்பு அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இரண்டாவது வரைவு வெளியிடப்பட்டுள்ள நிலையில் மாநில முதல்வர் சர்பானந்த் சோனாவால், ‘முதல் வரைவு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வெளயிடப்பட்டது. அப்போது அமைதியான சூழல் நிலவியது. இறுதிப் பட்டியலின் போதும் அதைப் போன்ற சூழலை காக்க வேண்டும் என்று மக்களை கேட்டுக் கொள்கிறேன்’ என்று கோரிக்கை வைத்துள்ளார். சட்ட ஒழுங்கை பாதுகாக்க மாநிலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகபடுத்தப்பட்டுள்ளன.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘இப்போது வெளியிடப்பட்டுள்ளது வெறும் இறுதி வரைவுதான். இது இறுதிப் பட்டியல் இல்லை. எனவே, மக்கள் யாரும் பதற்றப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். சிலர் சரியான ஆவணங்களை சமர்பிக்காததால் அவர்களின் பெயர் விடுபட்டுப் போயிருக்கும். எல்லோருக்கும் வாய்ப்பு கொடுக்கப்படும்’ என்று உறுதி அளித்துள்ளார்.

More News >>