சொந்த மக்களையே வெளியேற்றும் பாஜக அரசு- அசாம் விவகாரத்தில் மம்தா

அசாம் மாநிலத்தில் இன்று இறுதி குடியுரிமை இறுதி வரைவு வெளியிடப்பட்டது. இந்த வரைவு பட்டியல் வெளியிடப்பட்டதை அடுத்து, சுமார் 40 லட்சம் பேருக்கு குடியுரிமை இல்லாத நிலைமை உருவாகியுள்ளது.

அவர்கள் தகுந்த ஆவணங்கள் சமர்பிக்கவில்லை என்றால், மாநிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டுவர் என்று தெரிகிறது. அசாமில் 1951 ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போது தான் தேசிய குடிமக்கள் பதிவில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வங்க தேசத்திலிருந்து வந்து தங்கியுள்ள முஸ்லிம் அகதிகளை குறிவைக்கும் நோக்கில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமர்சிக்கப்பட்டு வருகறிது.

இந்நிலையில் இது குறித்து மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. மம்தா, ‘அசாமில் வெளியிட்டுள்ள வரைவில், பலர் வெளிநாட்டினர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது அந்த மக்கள் வெளியேற்றப்படுவார்களா? அரசு நீக்கியுள்ளதில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர். 

அவர்களுக்கு இனி வரப்போகும் கஷ்டங்களை நினைத்தால் கவலையாக இருக்கிறது. இது பிரித்து ஆளும் யுக்தியாகும். மக்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். இது மனிதத்தன்மையை அழித்துவிடும். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் தனிப்பட்ட முறையில் பேசுவேன். அவரிடம், மக்களைக் காப்பாற்றுங்கள், அவர்களை பிரிக்காதீர்கள் என்று கூறுவேன். இவ்வளவு பெரிய ஒரு முடிவை அரசு எடுக்கிறது. இது குறித்து எங்கள் மாநிலத்திடம் கலந்தோலிச்சித்து இருக்கக் கூடாதா?’ என்று கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

More News >>