மூடப்படாத மெட்ரோ ரயில் ஆழ்துளை கிணறு... பொதுமக்கள் போராட்டம்
சென்னை மாதவரத்தில் மெட்ரோ ரயில் பாதைக்காக மண் பரிசோதனை செய்ய தோண்டப்பட்ட பள்ளம் மூடாமல் திறந்து கிடப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
சென்னை மாதவரத்தில் ரூ85 ஆயிரம் கோடி செலவில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. மாதவரத்தில் இருந்து சிப்காட் வரை, கோயம்பேடு முதல் கலங்கரை விளக்கம் வரை, மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர்வரை என 107.76 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதையும், 116 ரயில் நிலையங்களும் அமைக்கப்படுகின்றன.
இதையொட்டி, மாதவரத்தில் உள்ள தனியார் நிலங்கள் ஆர்ஜிதம் செய்ய திட்டமிட்டு அரிசிநகர் உள்ளிட்ட இடங்களில் 200 பேருக்கு வருவாய் துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அரிசி நகரில் 150 க்கும் மேற்ப்பட்ட குடியிருப்புகள் அகற்றப்பட உள்ளன.
இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும், தற்போதுள்ள மெட்ரோ ரயில் திட்ட வரைவை குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்றியமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.