கருணாநிதியை சந்தித்து இன்று நலம் விசாரிக்க உள்ளார் ரஜினிகாந்த்

படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பும் ரஜினிகாந்த் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மூன்று நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரை தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் பலர் கருணாநிதியை பார்க்க காவேரி மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்து செல்கின்றனர்.

குறிப்பாக, கமல்ஹாசன் முதல் நாளே கருணாநிதி வீட்டில் இருந்தபேதே சந்தித்து நலம் விசாரித்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு முதல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வந்து சென்றனர்.

இந்நிலையில், படப்பிடிப்பு முடிந்து ரஜினி இன்று சென்னை திரும்புகிறார் என்றும் தொடர்ந்து கருணாநிதியை சந்திக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்று வந்தது. இங்கு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது. டார்ஜிலிங்கில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இன்று ரஜினி சென்னை திரும்புகிறார் என்று கூறப்படுகிறது.

இதன் பிறகு இன்று அல்லது நாளை திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிப்பார் என்ற தகவலும் கசிந்துள்ளது.

More News >>