ஹெல்மெட் போடுங்க பாஸ்... விநாயகர் பிரச்சாரம்
பெங்களூருவில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பால விநாயகர் வேடமணிந்த நபர் பிரசாரம் மேற்கொண்டார்.
நாட்டில் சாலை விபத்துகளால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில், தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நூதன முறையில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
அந்த வகையில் கர்நாடகா மாநிலத்தின் போக்குவரத்து காவல்துறை பல்வேறு இடங்களில் ஹெல்மெட் அவசியம் குறித்து நூதன விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அம்மாநில தலைநகர் பெங்களூருவில் பால விநாயகர் வேடம் அணிந்த நபர், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பிரசாரம் செய்தார்.
மேலும் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்தால் விபத்து ஏற்படும் போது உயிர் இழப்பு உண்டாகும் ஏற்படும் என்பதை விளக்கும் துண்டுபிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டன. தர்மம் தலைகாக்கும், தலைக்கவசம் உயிர்காக்கும்,சாலை விதிகளை மதிப்போம், சந்தோஷமாக வாழ்வோம், விழிப்புடன் இருப்போம், விபத்தினை தவிர்ப்போம் என்பன போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.
கர்நாடகா மாநில போக்குவரத்து காவல்துறையின், இந்த புதிய வாகன ஓட்டுநர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.