இரட்டைச் சதத்தால் ரோஹித் சர்மா முன்னேற்றம்!

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டைச்சதம் விளாசியதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ரோஹித் சர்மா ஐந்தாம் இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

இந்தியா - இலங்கை இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. மொகாலியில் 2-வது ஒரு நாள் போட்டியில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் விளையாடிய ரோகித் சர்மா (208 ரன்கள்) இரட்டை சதம் அடித்தார்.

இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 5-வது இடத்தை பிடித்துள்ளார். இந்த இரட்டை சதத்தால் ஐ.சி.சி. பேட்ஸ்மேன் தரவரிசையில் ரோகித் சர்மா 7-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

முதல் இரண்டு இடங்களில் விராட் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் உள்ளனர். டேவிட் வார்னர் 3-வது இடத்திலும், பாபர் ஆசம் 4-வது இடத்திலும், ரோகித் சர்மா 5-வது இடத்திலும் உள்ளனர்.

பந்து வீச்சு தரவரிசை - பந்து வீச்சு தரவரிசையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி முதல் இடத்திலும், இம்ரான் தஹிர் 2-வது இடத்திலும், பும்ரா 3-வது இடத்திலும் உள்ளனர்.

ஒருநாள் அணிகள் தரவரிசையில் இந்திய அணி தொடரை கைப்பற்றினாலும் முதல் ஆட்டத்தில் மோசமான பேட்டிங் மூலம் ஒரு புள்ளியை இழந்து 119 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. தென்ஆப்பிரிக்கா 121 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

More News >>