இம்ரான் கானுக்கு வாழ்த்து தெரிவித்த மோடி: பாகிஸ்தான் வரவேற்பு

பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்க இருக்கும் இம்ரான் கானுக்கு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளதை அந்நாட்டு அரசு வரவேற்றுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், 118 இடங்களை கைப்பற்றி தெக்ரீக்&இர்&இன்சாப் கட்சியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் வெற்றிப்பெற்றுள்ளார். இவர், வரும் ஆகஸ்டு மாதம் 11ம் தேதி பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார்.

இந்நிலையில், இம்ரான் கானுக்கு பிரதமர் மோடி செல்போன் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், பாகிஸ்தானில் ஜனநாயகம் ஆழமாக வேரூன்றும் எனவும் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுடன் அமைதி மற்றும் வளர்ச்சியை மட்டுமே அண்டைய நாடான இந்தியா விரும்புகிறது.இதற்கு பதிலளிக்கும் வகையில், இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகளை போர் மூலம் தீர்ப்பதற்கு பதில் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள விரும்புவதாகவும் இம்ரான் கான் தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் வாழ்த்துகளை பாகிஸ்தான் அரசு வரவேற்றுள்ளது. இம்ரான் கானின் வெற்றியை அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>