எக்ஸ்பிரஸ் ரயில் பாதையில் இனி மின்சார ரயில்கள் இயக்கப்படாது: ரயில்வே

சென்னையில் இனி எக்ஸ்பிரஸ் ரயில் பாதையில் மின்சார ரயில்கள் இயக்கப்படாது என்றும், இதனை நிரந்தரமாக நிறுத்த முடிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே அறிவித்துள்ளது.

பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்சார ரயில் படிகட்டில் தொங்கியபடி வந்த 5 பேர் தடுப்பு சுவரில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதற்கு காரணம், எக்ஸ்பிரஸ் ரயில் செல்லும் பாதையில் மின்சார ரயில் சென்றதே என்றும் கூறப்படுகிறது. மேலும், விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் மனோகரன் ஆய்வு செய்தார். அப்போது பொது மக்களிடம் கருத்துக்களை கேட்டு சட்டப்பூர்வ விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், எக்ஸ்பிரஸ் பாதையில் மின்சார ரயில் இயக்குவதை நிறுத்தப்பட்டுள்ளது.மேலும், பரங்கிமலையில் உள்ள நான்காவது நடைமேடை அருகே உள்ள தடுப்பு சுவரும் விபத்துக்கு காரணம் என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், சுவரை இடித்துவிட்டால் அதிகளவு விபத்து ஏற்படக்கூடும் என்றும் அதனால், சுவற்றின் அளவை மட்டும் குறைக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.

இதுபோல், ரயிலில் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக, இனி எக்ஸ்பிரஸ் பாதையில் மின்சார ரயில் இயக்கப்படும் சேவையை நிரந்தரமாக நிறுத்தவும் ரயில்வே முடிவு செய்துள்ளது.

More News >>