கார் எரிப்பு சம்பவம்: டி.டி.வி.தினகரன் வீட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

கார் எரிப்பு சம்பவத்தால் டி.டி.வி.தினகரன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கட்சியல் இருந்து காஞ்சீபுரம் நகரச் செயலாளர் புல்லட் பரிமளம் சமீபத்தில் நீக்கப்பட்டார். இவர், கடந்த மாதம் 29ம் தேதி டி.டி.வி.தினகரனின் வீட்டிற்கு வந்து காரை திடீரென பெட்ரோல் ஊற்றி எரித்து, கார் கண்ணாடிகளையும் உடைத்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன்எதிரொலியாக, புல்லட் பரிமளம் கார் ஓட்டுனர் சுப்பையா என்பவரை போலீசார் கைது செய்தனர். இதைதவிர, ஆர்.கே.நகர் தொகுதிக்கு டி.டி.வி. தினகரன் செல்லும்போதும் அவருக்கு எதிராக பல்வேறு பிரச்னைகளும் ஏற்படுத்துகின்றனர்.

இதனால், டி.டி.தினகரனின் உயிருக்கு ஆபத்த இருப்பதால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்படாமல் எம்.எல்.ஏ வெற்றிவேல் ஆகியோர் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டியை சந்தித்து மனு அளித்தனர்.

அவர்களது உத்தரவின்பேரில், டி.டி.வி.தினகரனின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் 5 பேர் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

More News >>