ஆந்திர போலீஸ் மீது தாக்குதல்...சிஆர்பிஎப் வீரர் கைதுnbsp

புல்லூர் தடுப்பணையில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆந்திர போலீசாரை தாக்கிய விவகாரத்தில், சிஆர்பிஎப் படை வீரர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.  தமிழக-ஆந்திரா மாநில எல்லையான புல்லூரில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநில அரசு தடுப்பனையை கட்டியுள்ளது. தற்போது அந்த அணை அதன் கொள்ளளவை எட்டி  முழுவதும் நிரம்பி தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த அணையில் அடிக்கடி குளிப்பவர்கள் நீரில் மூழ்கி பலியாவதால் குப்பம் காவல்துறையினர், அணையில் குளிப்பதற்கு தடை விதித்துள்ளனர். அத்துடன் இரு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.     இந்நிலையில், வாணியம்பாடி அருகே ஜோலார்பேட்டை அருகிலுள்ள கோடியூரை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படைவீரர் அருண்,புவனேஷ்,ஜீவா,பாரி  உள்ளிட்ட 4 பேர் அணையில் குளித்துள்ளனர். அங்கு இருந்த குப்பம் காவல்துறையை சேர்ந்த காவலர்கள் வெங்கடேஷ், முருகேஷ் ஆகியயோர்  குளித்து கொண்டிருந்த இளைஞர்களை வெளியே வருமாறு அழைத்துள்ளனர்.    அதனை பொருட்படுத்தாமல் தடுப்பணையில் இளைஞர்கள் குளித்தனர். பின்னர் கரை திரும்பிய சிஆர்பிஎப் வீரர் மற்றும் கூட்டாளிகள், இரண்டு காவலர்களையும்  சரமாரியாக தாக்கினார்கள். அங்கிருந்த பொதுமக்கள் அந்த 4 இளைஞர்களையும் பிடித்து கனகநாச்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான ஒரு அறையில் தள்ளி மூடினார்கள்.   தகவல் அறிந்து அங்கு வந்த குப்பம் காவல்துறையினர், அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 4 பேரை கைது செய்தனர். கைதான 4 பேரும் மது போதையில் தகராறில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
More News >>