சிறந்த எம்.பி.,க்களுக்கான விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி
டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறந்த நாடாளுமன்ற எம்.பிக்களுக்கான விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
டெல்லி நாடாளுமன்றத்தில் உள்ள மத்திய ஹாலில் இன்று சிறந்த வகையில் பணியாற்றி எம்.பிக்களுக்கான விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
மேலும், நாடாளுமன்றத்தில் சிறந்த முறையில் பணியாற்றிய எம்.பிக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார்.
இதில், கடந்த 2013ம் ஆண்டுக்கான விருது நஜ்மா ஹெப்துல்லாவுக்கும், 2014ம் ஆண்டுக்கான விருது ஹீக்குன் டியோவுக்கும், 2015ம் ஆண்டிக்கான விருது குலாம் நபி ஆசாத்துக்கும், 2016ம் ஆண்டுக்கான விருது திர்னேஷ் திரிவேதிக்கும், 2017ம் ஆண்டுக்கான விருது பார்த்ருஹரி மஹ்தாப்புக்கும் வழங்கப்பட்டது.