விராட் கோலியை வம்புக்கு இழுக்கும் புனே அணியின் உரிமையாளர்

தோனியை வம்புக்கு இழுத்துக் கொண்டிருந்த புனே அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஹர்ஸ் கோயங்கா இப்பேதாது விராட் கோலியை சீண்டத் தொடங்கியுள்ளார்.

 

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே விலகியுள்ளார். புதிய பயிற்சியாளரத் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கேப்டன் விராட் கோலிக்கும் கும்ப்ளேவுக்குமிடையே கருத்து வேறுபாடு நிலவியதே இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் தேடலுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில், புனே அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஹர்ஸ் கோயங்கா, கேப்டன் விராட் கோலியை சீண்டும் வகையில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், '' இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்களா?. அப்படியென்றால், டிராவல் ஷெட்யூல்ஸ் போடத் தெரிய வேண்டும்; ஹோட்டல் அறைகள் புக் செய்ய தெரிந்திருக்க வேண்டும். ; பிசிசிஐ மற்றும் இந்திய கிரிக்கெட் அணிக்கு பணிந்து நடக்கவும் தெரிந்திருக்க வேண்டும்'' என்றுக் கிண்டலாகக் கூறியுள்ளார்.

நடந்து முடிந்த ஐ.பி.எல். தொடருக்கு முன்னதாக புனே அணி கேப்டன் பதவியில் இருந்து தோனி நீக்கப்பட்டார். அப்போது, 'தோனி நீக்கப்பட்டது சரி என்றும் ஸ்டீவ் ஸ்மித் சிங்கம் போன்றவர்' எனவும் ஹர்ஸ் கோயங்கா ட்வீட் செய்திருந்தார். இதை புனே அணியின் உரிமையளார் சஞ்சீவ் கோயங்காவும் கண்டிக்கவில்லை.

More News >>