அதிமுக எம்.எல்.ஏ.போஸ் மாரடைப்பால் மரணம்
திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.போல் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ஏ.கே.போஸ் (69). இவர், மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவாநகர் பகுதியில் வசித்து வந்தார். இவர், திருப்பரங்குன்றம் தொகுதியில் 3 முறை எம்எல்ஏவாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.
இந்நிலையில், போஸ் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது, அவருக்கு தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர். போஸை மீட்டு உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால், போஸ் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏ.கே.போஸ் இறுதி சடங்களில் பங்கேற்ற அதிமுகவினர் பலர் செல்கின்றனர்.