காவேரி மருத்துவமனைக்கு விரைந்தார் விஜய் ஆண்டனி
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி இன்று காலை மருத்துவமனைக்கு விரைந்து மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்.
திமுக தலைவர் கருணாநிதி இன்றுடன் ஆறாவது நாளாக காவேரி மருத்துவமனையில் உடல்நலம் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். கருணாநிதியின் உடல் நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அரசியல்வாதிகளை தொடர்ந்து தற்போது சினிமா பிரபலங்கள் கருணாநிதியை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
நடிகர்கள் கமல், ரஜினியை தொடர்ந்து நேற்று காலை நடிகர் விஜய் மற்றும் மாலை நடிகர் அஜித், நடிகர் சிவகுமார், சூர்யா, விவேக், சூரி ஆகியோர் கவேரி மருத்துவமனைக்கு வந்து மு.க.ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.
இவர்களை தொடர்ந்து, இன்று காலை இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி மருத்துவமனைக்கு நேரில் சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் விசாரித்து தெரிந்துக் கொண்டார்.