த்ரில்லர் நரகாசூரன் பட ட்ரைலர் ரிலீஸ்
கார்த்திக் நரேன் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் நரகாசூரன் படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிய துருவங்கள் பதினாறு திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைதொடர்ந்து, கார்த்திக் நரேன் நரகாசூரன் என்ற த்ரில்லர் படத்தை உருவாக்கி உள்ளார். இந்த படத்தில், அரவிந்த் சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித், சுகுமாரன், ஸ்ரெயா சரண், ஆத்மிகா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந் ஆண்டு நவம்பர் மாதம் முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நரகாசூரன் படத்தின் ட்ரைலர் நேற்று மாலை 5 மணியளவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இயக்குனர் கார்த்திக் நரேன் தனது ட்விட்டர் பக்கத்தில் நரகாசூரன் படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலரை வெளியிட்டார்.
மேலும், நரகாசூரன் திரைப்படம் வரும் ஆகஸ்டு 31ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.