மித்தாலி ராஜ் வாழ்க்கை படமாகிறது: நடிக்க போவது யார் தெரியுமா ?
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜின் வாழ்க்கை கதையில் நடிக்க தேர்வாகியுள்ளார் நடிகை டாப்ஸி.
மகளிர் அணியின் கேப்டன் ஆன மிதாலி ராஜ் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். அதில் ஒன்று ஒருநாள் போட்டிகளில் 6000 ரன்களை கடந்தது சிறப்பான சாதனை. ஐதராபாத்தில் வசித்து வரும் மித்தாலி ராஜ் தனது வாழ்க்கை கதையை படமாக எடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார். தனது சிறு வயது முதல் தற்போது உயர்ந்துள்ள இடம் வரை தனது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான பக்கங்களை தெரிவித்துள்ளார்.
மித்தாலி ராஜின் வாழ்க்கை கதையில் நடிக்க நடிகை டாப்ஸி தேர்வாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது பற்றி டாப்ஸி கூறும் போது: ஒரு விளையாட்டு வீராங்கனையின் வாழ்க்கை கதையில் நடிப்பது எனது கனவு. மேலும் படத்தின் திரைக்கதை தயாராகி வருகிறது, அதனால் படத்தை பற்றி தற்போது எதுவும் கூற முடியாது என்றார்.
மிதாலி ராஜ் தனது வாழ்க்கை கதையில் நடிக்க பொருத்தமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா என்றும், தனது குணமும் பிரியங்கா சோப்ரா குணமும் பல்வேறு இடங்களில் ஒற்றுமையாய் உள்ளது என்றும் கூறியிருந்தார். ஆனால் தற்போது நிலை மாறி டாப்ஸி நடிக்க இருக்கிறார்.