காட்டேரியில் ஹன்சிகா

பிரபுதேவாவின் இயக்கத்தில் வெளியான எங்கேயும் காதல் படம் மூலம் அறிமுகமானவர் ஹன்சிகா. தமிழ் ஒரு வார்த்தை கூட தெரியாதபோதும், அழகாக பேசி ரசிகர்களை கவர்ந்தவர். இதனால், அடுத்தடுத்து தனுஷ், விஜய், சிம்பு என முன்னணி நடிகர்களுடன் நடித்தார். நடித்தால் முன்னணி நடிகர்களுடன் தான் நடிப்பேன் என்று அடம்பிடித்த ஹன்சிகாவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அடடா, இப்படியே இருந்தா சரி வராதே என்று சுதாரித்துக் கொண்ட ஹன்சிகா, திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர் வைபவின் ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.வைபவ் நடிக்க இருக்கும் காட்டேரி படத்தில் அவருக்கு ஜோடியாகிறார் ஹன்சிகா. இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.இதற்கிடையே, சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கவும் ஹன்சிகா ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>