ரூ.34 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி :nbspபிரபலnbspபாலிவுட் இயக்குனா் கைது

மும்பையில் 34 கோடி ரூபாய் அளவுக்கு சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) மோசடி செய்த பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குநா் விஜய் ரத்னாகா் கட்டே கைது செய்யப்பட்டாா்.

விஆா்ஜி டிஜிட்டல் என்ற திரைப்பட நிறுவனத்தை நடத்தி வரும் விஜய் ரத்னாகா், ஹாரிஸான் அவுட்சோா்ஸ் சொல்யூசன்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்களிடம் இருந்து பொருள்கள் மற்றும் சேவையைப் பெறுவதற்காக 149 போலி ரசீதுகளை தயாா் செய்து ஜிஎஸ்டி வரியில் மிகை வரியை திரும்பப் பெறுதல் முறையில் ரூ.34.37 கோடி ரூபாயை பெற்றுள்ளாா்.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதலே அவா் இந்த மோசடியை நடத்தி வந்துள்ளார். மாநில ஜிஎஸ்டி துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் அவரது முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, ஜிஎஸ்டி துறை விசாரணை அதிகாரிகள் அவரைக் கைது செய்தனா். ஜிஎஸ்டி இயக்குநர், அதிகாரிகள் ஏற்கெனவே ஹாரிஸான் நிறுவனத்தின் தலைவரை கடந்த மாதம் கைது செய்தனா்.

விஜய் ரத்னாகா் மகாராஷ்டிரத்தில் பிரபலமான சா்க்கரை ஆலை அதிபா் ரத்னாகா் கட்டேவின் மகன் ஆவாா். ரத்னாகா் கட்டே, கடந்த மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணி சாா்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா். விஜய் ரத்னாகா் இயக்கிய ‘தி ஆக்சிடெண்ட்டல் பிரைம் மினிஸ்டா்’ திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வர இருக்கிறது. இது முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் குறித்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>