இலவச கண் சிகிச்சை முகாம்: நடிகை ஸ்ரீப்ரியா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச கண் சிகிச்சை முகாம் நிகழ்ச்சியை நடிகை ஸ்ரீப்ரியா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி - கோவிலம்பாக்கம் மற்றும் பம்மல் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமிற்கு ஏற்பாடு செய்தது. அதன்படி, இன்று காலை 9 மணியளவில் கோவிலம்பாக்கம் பகுதி எஸ்.கொளத்தூர் மெயின் ரோட்டில் உள்ள சமுதாயக்கூடத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் தொடங்கியது.
இதன் தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மண்டல பொறுப்பாளர் செயற்குழு உறுப்பினர் ஏ.ஜி.மௌரியா, நடிகையும், செயற்குழு உறுப்பினருமா ஸ்ரீபிரியா, செயற்குழு உறுப்பினர் அ.சௌரிராஜன், செயற்குழு உறுப்பினர் சி.கே.குமரவேல் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இவர்களை தவிர, கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.
இதில், ஸ்ரீப்ரியா இலவச கண் சிகிச்சை முகாமை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த முகாம், மதியம் 1 மணி வரையில் நடைபெறும் என்றும் பொது மக்கள் அனைவரும் கலந்துக் கொண்டு பயன்பெறுமாறும் கட்சி நிர்வாகிகள் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.