பாகிஸ்தானில் கோர விபத்து: பேருந்துலாரி மோதி 20 பேர் பலி
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இன்று பேருந்தும் லாரியும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 20 பேர் பலியாகினர்.
பாகிஸ்தானின் வடமேற்கு புனெர் நகர் பகுதியில் இருந்து கராச்சி பகுதியை நோக்கி இன்று பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்தது. இந்த பேருந்து, கைபர் பக்துன்குவாவில் கோஹத் மாவட்டத்தில் சமரி பகுதி அருகே வந்த பொழுது, லாரி ஒன்றின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்தில் சிக்கியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை பெண்கள், குழந்தைகள் உள்பட 20 பேர் பலியாகி உள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், விபத்தில் சிக்கி காயமடைந்த சுமார் 35 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாணை நடத்தப்பட்டு வருகிறது.