ரஜினி, கமலுக்கு இல்லை தினகரனுக்கே என் ஆதரவு: நடிகர் தினேஷ்
அரசியல் பொறுத்தவரை ரஜினி, கமலுக்கு என் ஆதரவு இல்லை. தினகரனுக்கே என் ஆதரவு என்று நடிகர் அட்டகத்தி தினேஷ் தெரிவித்துள்ளார்.
நடிகர் தினேஷ் அட்டக்கத்தி படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி அனைவரது மனதிலும் இடம்பிடித்தார். இதன்பிறகு, பல்வேறு படங்களில் நடித்து வெற்றி கொடுத்தார்.இந்நிலையில், நடிகர் தினேஷ் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் படம் ‘அண்ணனுக்கு ஜே’. இந்த படத்தில் தினேஷ் அரசியல்வாதியாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில், நடிகர் தினேஷ் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.
அப்போது நடிகர் தினேஷ் கூறியதாவது: சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அரிசயலில் நுழையும் இளைஞனின் பற்றிய கதை தான் அண்ணனுக்கு ஜே. எனக்கும் சிறிய வயது முதல் அரசியல் ஆசை இருக்கிறது. ஆனால், அதற்கு நல்ல அனுபவம் வேண்டும்.
தமிழகம் பொறுத்தவரை இங்கே வழிகாட்ட சரியான தலைவர்கள் இல்லை. எதிர்த்து போராட்டம் செய்பவர்களை துப்பாக்கியால் சுடுகிறார்கள். ரஜினி, கமலை நான் ஆதரிக்கவில்லை. என் ஆதரவு தினகரனுக்கு தான். இதனைநான் பொதுமக்களில் ஒருவராக கூறுகிறேன். அவர், நன்றாகவும், நேர்த்தியாகவும் அணுகிறார்.