அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை சீர்கெட்டு வருகிறது: மு.க.ஸ்டாலின் கண்டனம்

பொறியியல் தேர்வுத்தாள் மறுமதிப்பீடு ஊழல் சம்பவம் தொடர்பாக, அதிமுக ஆட்சியை கண்டித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:  விடைத்தாள் அச்சடிப்பதிலும் ரூ.60 கோடி ஊழல் நடந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக தேர்வு முறையின் மீது நம்பகத்தன்மைக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளது. ஊழலில் ஈடுபட்டோர் மீது மூத்த ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக அண்ணா பல்கலைக்கழகத்தில் 2015 முதல் 2018-ம் ஆண்டு வரை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த உமா, தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் போது, அதிக மார்க் வழங்கி முறைகேடு செய்ததாகவும், இதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு பணிகள் தொடர்பாக தனியார் நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திலும் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை சீரழிந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

More News >>