காதலுக்கு எதிர்ப்பு: கத்தியால் கிழித்து அத்தையை கொலை செய்த சிறுவன் கைது
சென்னை அமைந்தகரையில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அத்தையை கத்தியால் குத்தி கொலை செய்த சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் சங்கரசுப்பு - தமிழ்ச்செல்வி தம்பதி. இவர்களுக்கு மகனும், மகளும் உள்ளனர்.
இந்நிலையில், தமிழ்ச்செல்வியின் மகளை (13) அவரது உறவினர் மகன் (15) காதலித்து வந்துள்ளார். இதுகுறிதது தமிழ்செல்விக்கு தெரியவந்ததை அடுத்து, சிறுவனை அவர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் தமிழ்ச்செல்வி வீட்டில் தனியாக இருந்தபோது, அவரை கீழே தள்ளி கரடி பொம்மையை எடுத்து முகத்தில் அழுத்தி மூச்சு திணற வைத்துள்ளார். பின்னர், கையின் மடிக்கட்டை வெட்டிவிட்டு அங்கிருந்து தலைமறைவாகி உள்ளார்.
தமிழ்ச்செல்வியின் கொலை குறித்து போலீசாருக்கு தகவல் தெரிய வந்ததை அடுத்து, அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். இதில், சிறுவன் கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் சிறுவனை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.