இந்தோனேசியாவின் லோம்போக் தீவில் பயங்கர நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் லோம்போக் தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.  நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவில் 7-ஆக பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு தீவுகளை கொண்ட இந்தோனேசியாவில் அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளதால் இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.   இந்நிலையில், சுமத்ராவை ஒட்டியுள்ள லோம்போக் என்ற தீவின் அருகே இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7 ஆக நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த வீடுகளும், கட்டிடங்களும் பலத்த சேதமடைந்துள்ளன. இதனால் மக்கள் அலறியடித்து கொண்டு தெருக்களில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.    கடந்த வாரம் லோம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 17 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
More News >>