திரைப்படத் துறையில் கால்பதிக்கிறார் சானியா மிர்சா?

பிரபல விளையாட்டு வீராங்னை சானியா மிர்சாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படவுள்ளது. இந்தப் படத்திடல் அவரே நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விளையாட்டு வீராங்னை சானியா மிர்சாவின் சிறுவயது வாழ்க்கை, டென்னிஸ் விளையாட்டில் நிகழ்த்திய சாதனைகள், திருமணம் உள்ளிட்ட அனைத்தையும் வாழ்க்கை படத்தில் காட்சிபடுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த படத்தின் உரிமைக்காக சானியா மிர்சாவுக்கு, பட நிறுவனம் பெரிய தொகையை அவர் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படத்தில் சானியா மிர்சா வேடத்தில் நடிக்க டாப்சியை பரிசீலித்தனர். இப்போது சானியா மிர்சாவையே அவரது கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சானியா மிர்சா மும்பையில் 15.11.1986 அன்று பிறந்தார். இவரது தந்தை இம்ரான் மிர்சா விளையாட்டு துறை பத்திரிகையாளர். தாயார் நசிமா. தனது ஆறாம் வயதில் டென்னிஸ் விளையாடத் தொடங்கினார். முதலில் அவர் தனது தந்தையாலும் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களாலும் டென்னிஸ் விளையாட்டில் பயிற்சி அளிக்கப்பட்டார்.

சானியாவிற்கு டென்னிஸ் கற்றுத்தர இருந்த பயிற்சியாளர் முதலில் அவரை பயிற்றுவிக்க தயங்கினார். காரணம் சானியா உயரம் குறைவாகவும், 6 வயதை உடைய சிறுமியாகவும் இருந்தார் . ஆனால் ஒரு மாத பயிற்சியிலேயே எத்துணை சிறந்த வீராங்கனையை அவர் என்பதை பயிற்சியாளர் உணர்ந்துகொண்டார்.

அவர் முதலில் ஹைதராபாத்தில் உள்ள நாசிர் பள்ளியில் படித்து பின்னர் செயின்ட் மேரிஸ் கல்லூரியில் பட்டம் பெற்றார். 2003ம் ஆண்டு முதல் டென்னிஸ் விளையாட்டை அதிகார்பூர்வமாக தொழிலாக்கிக் கொண்டார்.

இரட்டையர் பிரிவில் விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றார் சானியா மிர்சா. இவர், குட்டை பாவாடை அணிந்து விளையாடியது விமர்சனங்களை கிளப்பியது இந்த விமர்சனங்களுக்கு அவர் செவிசாய்க்காமல் தன் வழியில் பயணித்தார்.

இந்நிலையில், இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூ‌ஷன் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை அவர் பெற்றுள்ளார். இவருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்குக்கும் 2010–ல் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>