கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு: 24 மணிநேரமும் தொடர்ந்து கண்காணிப்பு: மருத்துவமனை அறிக்கை

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும், உடலின் முக்கிய உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளது என்று காவேரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த மாதம் 27ம் தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு, கருணாநிதியின் உடல்நிலை சீராக இருந்து வந்தது.

இதையடுத்து, கடந்த இரண்டு நாட்களாக கருணாநிதியின் உடல்நிலையில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்றும், இன்று காலை உடல்நிலையின் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை சற்று நேரத்திற்கு முன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அந்த அறிக்கையில், “திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கருணாநிதியின் முக்கிய உடல் உறுப்புகளை சீராக செயல்படுத்துவது சவாலாக உள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்கு கருணாநிதியின் உடல் நிலையில் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியுள்ளது. 24 மணி நேரத்திற்கு பிறகு, உடல்நிலை குறித்து தெரிவிக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த தகவல் பரவியதை அடுத்து, திமுக நிர்வாகிகள், கருணாநிதியின் மனைவி தயாள் அம்மாள் மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு விரைந்தனர். தொண்டர்கள் மருத்துவமனையை சூழ்ந்துள்ளதால் போலீசார் பாதுகாப்புக்காக சூழ்ந்துள்ளனர் குவிக்கப்பட்டுள்ளனர்.

More News >>