ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு - மத்திய இணையமைச்சர் தகவல்
மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு வருடத்திற்கு இரண்டு முறை தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய இணை அமைச்சர் உபேந்திரா குஷ்வாஹா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு உபேந்திரா குஷ்வாஹா பதிலளித்துப் பேசினார். அப்போது, “தேசிய அளவில் உயர் கல்விக்காகத் நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கு தன்னிச்சையான அதிகாரம் கொண்ட ‘நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி’(National Testing Agency) ஏற்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இனி ஆண்டுக்கு 2 முறை இணையம் வழியாக மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வையும் பொறியியல் படிப்புக்கான JEE நுழைவுத்தேர்வை இந்த அமைப்பு நடத்தும்.
அதன்படி, இனி மாணவர்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. முதல் முறை தேர்ச்சிபெறத் தவறினாலும் அடுத்த 6 மாதத்தில் மீண்டும் ஒரு வாய்ப்பைப் பெற முடியும்” என்று கூறினார்.