இத்தாலியில் பயங்கர விபத்து: ரசாயன டேங்கர் லாரி வெடித்து இருவர் பலி
இத்தாலியில் ரசாயனம் ஏற்றி சாலையில் சென்றுக் கொண்டிருந்த டேங்கர் லாரி ஒன்று பயங்கரமாக வெடித்ததில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இத்தாலி, பாலோக்னா நகரில் உள்ள மேம்பாலத்தின் மேல் நேற்று அதிக வாகன நெரிசல் காணப்பட்டது. அப்போது அந்த வழியாக ரசாயனம் ஏற்றிக் கொண்ட டேங்கர் லாரி எதிரே சென்றுக் கொண்டிருந்த மற்றொரு டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில், ஒரு டேங்கர் லாரி தீ பற்றிக் கொண்டு மளமளவென எரிந்தது. இதைதொடர்ந்து சில நொடிகளில் ரசாயன டேங்கர் லாரி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த விபத்தில், இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்தில், மேம்பாலத்தின் ஒரு பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது. இந்த விபத்தால் அப்பகுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.