இந்திரா பானர்ஜி, வினித் சரண், கே.எம்.ஜோசப் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்பு

உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இந்திரா பானர்ஜி, வினித் சரண், கே.எம்.ஜோசப் ஆகியோர் பதவி ஏற்று க்கொண்டனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த வினித் சரண், உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.எம்.ஜோசப் ஆகிய மூவரையும் கொலீஜியம் பரிந்துரைகளின்படி உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியிமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார்.

அதன்படி நீதிபதிகள் மூன்று பேருக்கும் இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மீஸ்ரா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதற்கான நிகழ்ச்சி உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றன

உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 31 நீதிபதிகள் உள்ளன. புதிய நீதிபதிகளின் பதவிபேற்புக்கு பிறகு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது என்றும், மீதமுள்ள 6 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

More News >>