கருணாநிதியின் உடல்நிலையில் பெரும் பின்னடைவு: காவேரி மருத்துவனை அறிக்கை
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குன்றி காவேரி மருத்துவமனையில் அனுமிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நேற்று கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டது. அவரது, முக்கிய உறுப்புகள் செயல்படுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், அவரது உடல்நிலை குறித்து 24 மணி நேரத்திற்கு பிறகே தெரியவரும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 11வது நாளாக சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நிலை இன்று தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. மேலும், காவேரி மருத்துவமனையின் அறிக்கை இன்று மாலை வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அந்த வகையில், தற்போது 4.30 மணியளவில் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதில், மருத்துவ உபகரணங்கள் உதவி இருந்தபோதும், முக்கிய உறுப்புகள் இயக்கம் சரியாக இல்லை என்றும், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகவும், நிலையற்ற தன்மையாக இருப்பதாகவும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.