மருத்துவமனை அறிக்கை வெளியீடு எதிரொலி: தொண்டர்கள் கதறல்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்ட நிலையில், தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளதாகவும், உடல் உறுப்புகள் சீராக இயங்குவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அறிக்கை குறித்து வெளியில் தெரியவந்ததை அடுத்து தொண்டர்கள் மேலும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தொண்டர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கூடிக் கொண்டே இருக்கிறது. மருத்துவமனை சுற்றிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தொண்டர்கள் உணர்ச்சிப்பொங்க, ‘எழுந்து வா தலைவா..’ என்று முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர். பெண்கள், குழந்தைகள் என அனைவரும் கண்ணீர் மல்க கதறி அழுது வருகின்றனர்.
இதனால், காவேரி மருத்துவமனை வெளியே அசாதாரமான சூழல் நிலவி வருவதால், இதனால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.