கருணாநிதி குடும்பத்தினர் கண்ணீருடன் வீடு திரும்பினர்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ள நிலையில், அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் கோபாலபுரம் இல்லம் திரும்பி உள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று காவேரி மருத்துவமனை கடந்த சில மணி நேரத்திற்கு முன்பு அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில், கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களான துர்கா ஸ்டாலின், மோகனா தமிழரசு, செல்வி உள்பட பலர் கண்ணீருடன் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றடைந்தனர்.