கருணாநிதி மறைவு...தி.மு.க கட்சி கொடி அரைகம்பத்தில்
By Radha
தி.மு.க தலைவர் கருணாநிதி மறைந்ததை தொடர்ந்து, அக்கட்சி கொடி அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க கட்சியின் தலைமை அலுவலகம், மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் கட்சி கொடி அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
கருணாநிதி மறைவையொட்டி ஏழு தினங்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.