கருணாநிதி உடல் காலை 4 மணிக்கு ராஜாஜி ஹாலுக்கு வருகை

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல், அதிகாலை 4 மணிக்கு ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்படும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

தி.மு.க தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், " உலகத் தமிழர்களையெல்லாம் மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு விடைபெற்றுள்ள தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் உடல் கோபாலபுரம் இல்லத்தில் 8.30 முதல் நள்ளிரவு 1.00 மணி வரையிலும், சி.ஐ.டி. காலனி இல்லத்தில் அதிகாலை 3.00 மணி வரை குடும்பத்தினரும் உறவினர்களும்இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது."

"அதன் பின்னர் அதிகாலை 4 மணி முதல் ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்பட்டு கழக உடன்பிறப்புகளுக்கும் பொதுமக்களுக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும்இறுதிவணக்கம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கழகத்தினரும், பொதுமக்களும், அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறோம்." என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

More News >>