கருணாநிதி உடலுக்கு ராஜாஜி அரங்கில் தேசிய கொடி போர்த்தி மரியாதை
சென்னை ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு தேசிய கொடி போர்த்தி அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு சிகிச்சை பலனின்றி காலமானார்.
இதனைத் தொடர்ந்து, கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து முதலில் கோபாலபுரம் இல்லத்தில் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், அங்கிருந்து சிஐடி காலனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது.
அதன்பின்னர், சிஐடி காலனியில் இருந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கத்துக்கு கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு முப்படை வீரர்கள் தேசிய கொடி போர்த்தி அரசு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.