கருணாநிதி மறைவு... கதறி அழுத வைரமுத்து
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு இரு மகன்களுடன் வந்த கவிஞர் வைரமுத்து, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி பேழையில் தலை சாய்த்து வைரமுத்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடைசி தமிழர் இருக்கும் வரை தி.மு.க தலைவர் கருணாநிதி போற்றப்படுவார். லட்சியவாதிகளை மரணம் பறிப்பதில்லை. விதைக்கிறது"
"சாலச்சிறந்த நிர்வாகி கருணாநிதி மறைந்துவிட்டார். ஏராளமான படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். எனது 35 ஆண்டுகளாக சிறந்த ஆசான். உலகத்தில் கடைசி தமிழன் இருக்கும் வரை கருணாநிதியின் புகழ் போற்றப்படும்." என கண்ணீர் விட்டார்.