கலைஞருக்கு கவிதைnbspஅஞ்சலி..!

கலைஞருக்கு 'கவிதை' அஞ்சலி! சரிந்தது இமயம்  மட்டுமில்லை .. எட்டுக் கோடி மக்களின் இதயங்களும்தான்..!   ஐயா.. தமிழ் காக்க  தண்டவாளத்தில் தலை வைத்தாய்.. இந்தித் திணிப்பின் வண்டவாளம் தனை அறுத்தாய்..!   பெரியார், அண்ணா கொள்கை கொண்டாய்.. வறியோர் ஏழ்மை துயர் துடைப்பதே  பொது வாழ்வின் எல்கை எனறாய்..!   அஞ்சுகத் தாய்  புதல்வரானாய். ஐந்து முறை முதல்வராகி தமிழ்  எதிர்ப்பெனும்  நஞ்சுகள் முறித்து   ஐயகோ.. சரித்திரப்புகழ் பராசக்தி" படைத்த உன் மீது காலமது வீசியதே  மரணமெனும்  மோசக் கத்தி..!   ஐயா அடக்கு முறைக்கு வளைந்து கொடுக்காதது உமது பேனாவின் குணமாமே.. அதனால்தான் நீர் என்றும் கவரிமான் இனமாமே!   பாருமய்யா.. விண்ணில் பறந்ததே உந்தன் உயிர்க் குருவி.. அதனால் எந்தன் கண்களில் ஓடுதே கண்ணீரெனும் துயர் அருவி..!   எத்தனை வேள்வி.. எத்னை தோல்வி.. உமை சோடையாக்க செய்திட்ட சூழ்ச்சிகள் மீண்டு வித்தென முளைத்தாய் அதனாலன்றோ தமிழின்  சொத்தென நிலைத்தாய்..!   சூரியனுக்கு முன்பே விழித்துக் கொள்ளும் சுபாவம் .. இனி அந்தச் சூரியனும் உமைத் தேடுமே ஏது பதிலுரைப்போம் அது பாவம்....!   இரவெல்லாம் உறங்காது எழுத்து.. எழுத்து... ஒரு நாளும் அதிகாரத் திற்கு  அடங்கிக் குனியலையே  உமது பேனாவின் கழுத்து.. கழுத்து..!   ஐயா.. தமிழரின் அடையாளம் மரணிப்பது  ஆறாத காயமா.. முத்தமிழ் ஜோதி செத்து அணைகிறதே இது நியாயமா.?   ஐயா.. மாண்டு விட ்டீரே.. ஆண்டுகள் மூப்பு  அதற்காய்.. மீண்டும் பிறந்து வருக  தமிழ் காக்கணும்  அதற்காய்..!    -அல்லிநகரம் தாமோதரன்
More News >>