கருணாநிதி இறுதி சடங்கு ஏற்பாடுகள் தீவிரம்
உயர் நீதிமன்றம் தீர்ப்பை தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதி உடலை அடக்கும் செய்வதற்கான ஏற்பாடுகள் சென்னை மெரினாவில் நடைபெற்று வருகிறது.
திமுக தலைவர் கருணாநிதி உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய அனுமதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை தொடர்ந்து, கருணாநிதி உடல் அடக்கம் செய்வதற்கான மாதிரி வரைப்படத்தை திமுக தரப்பு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இதனை தொடர்ந்து சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடத்திற்கு பின்புறம் கருணாநிதி உடலை புதைக்க பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
2ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. திமுகவின் முதன்மை செயலாளர் துரைமுருகன், எம்.எல்.ஏ எ.வ.வேலு ஆகியோர் இந்த பணியை பார்வையிட்டு வருகின்றனர்.
திமுக தலைவர் கருணாநிதியின் இறுதிச் சடங்கு இன்று மாலை 5 மணிக்கு தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.