கருணாநிதிக்கு வெண்கலச் சிலை: புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு வெண்கலச் சிலை அமைக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயாணசாமி அறிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 6.10 மணிக்கு மரணமடைந்தார். தற்போது, ராஜாஜி ஹாலில் பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசு மற்றும் புதுச்சேரி அரசு 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதிக்கு நாடு முழுவதில் இருந்தும் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயாணசாமி அறிவித்துள்ளார். இதைதவிர, காரைக்காலில் அமைய உள்ள புறவழிச்சாலைக்கு கருணாநிதி பெயர் சூட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளார்.