கருணாநிதியின் உடல் இறுதி ஊர்வலம்
திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
முதலமைச்சரும் திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று மாலை காலமானார். அவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்தது.
கருணாநிதி உடலுக்கு அகில இந்திய அரசியல் தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும், திரை உலக பிரபலங்களும் ஏராளமான தொண்டர்களும் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், ராஜாஜி ஹாலில் இருந்து இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி உடல் ஊர்வலமாக வாலாஜா சாலை வழியாக அண்ணா நினைவிடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. ஏராளமான தொண்டர்கள் கண்ணீருடன் உடன் செல்கின்றனர்.
அங்கு அவரின் உடல் நடல்லடக்கம் செய்யப்படுகிறது.