ஜெயலலிதா வீடியோவை யாரோ எடுத்திருக்கிறார்கள்! - அப்போலோ விளக்கம்

ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை அவருக்கு நெருக்கமானவர்கள் எடுத்திருக்கலாம் என்று அப்போலோ மருத்துவமனை தரப்பு நிர்வாகம் கூறியுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு 22ஆம் தேதி இரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். அப்போது காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் 75 நாட்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி அவரது உயிர் பிரிந்ததாக அப்போலோ நிர்வாகம் அறிவித்தது.

ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு தரப்பினரும் சந்தேகம் எழுப்பியிருந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுத்த வீடியோ ஒன்றை தகுநீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் வெளியிட்டார்.

தற்போது அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.

”ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது எடுக்கப்பட்ட வீடியோதான். ஆனால் ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை நாங்கள் எடுக்கவில்லை; ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள் இந்த வீடியோவை எடுத்திருக்கலாம்” அப்போலோ மருத்துவமனை தரப்பு கூறியுள்ளது.

More News >>