ஜெ. வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது வழக்கு? - தேர்தல் ஆணையம் அதிரடி
அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவின் வீடியோ வெளியிட்ட எம்எல்ஏ வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் மரணம் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுத்த வீடியோ ஒன்றை தகுநீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் வெளியிட்டார்.
மேலும், நாளை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ஜெயலலிதா சிகிச்சை பெற்றதாக கூறப்படும் வீடியோ வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், வெற்றிவேல் மீது வழக்குபதிவு செய்ய ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரி பிரவீண் நாயருக்கு தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டுள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.