தமிழக வெற்றிடத்தை யார் நிரப்புவார்கள்...? கமலின் அதிரடி பதில்!
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப மக்கள் முடிவு செய்வார்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
விஸ்வரூபம்-2 திரைப்படம் தமிழகத்தின் குறிப்பிட்ட சில இடங்களை தவிர பெரும்பாலான இடங்களில் திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு கமல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இது குறித்து பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், விஸ்வரூபம் -2 படத்திற்கு இந்தியா முழுவதும் பெரிய வரவேற்பு இருக்கிறது. ஒரு சிலர் இடைஞ்சல் செய்வது விளம்பரமாக முடியும் என்று நம்புகிறேன். அவர்களுக்கு நன்றி சொல்ல நேரமில்லை.
ஆனால் எங்களை வரவேற்ற ரசிகர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு உள்ளேன். தமிழகத்திலும், ஆந்திராவிலும், மும்பையிலும் வடமாநிலலங்களிலும் பெரிய வரவேற்பு தந்து உள்ளனர். இந்த வெற்றியை பார்க்க ரொம்ப நாள் காத்திருந்தோம்.
மய்யத்தின் பாடல்களை இனி எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படும் என்பதற்கு முன்னுதாரணமாக இருக்கும். திரைக்கும் சம்பந்தப்படுத்த மாட்டேன். ஆனால் எந்த மேடை கிடைத்தாலும் பயன்படுத்துவேன். கதையில்லை மய்யத்தை கலக்க மாட்டோம். மக்கள் நீதி மய்யம் தனது பணியை செய்து கொண்டே இருக்கும்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை யார் நிரப்புவர்கள் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். மக்களை நோக்கி தான் பயணம் செய்துக் கொண்டு இருக்கிறோம். மக்களின் நலனுக்காக என்ன செய்ய வேண்டுமோ அது எங்கள் பணியும் கடமையும் ஆகும்.
2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து கலந்து ஆலோசித்து தேவைப்பட்டால் தயாரவோம்." எனக் கூறினார்.