ஜெயலலிதா வீடியோவை நிறுத்துங்கள் - தேர்தல் ஆணையம் உத்தரவு

ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை ஒளிபரப்புவதை நிறுத்த வேண்டும் என அனைத்து ஊடகங்களுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் சார்பில் வெளியிட்டுள்ள கடித்ம் பின்வருமாறு: தகவல் ஒளிபரப்பு தடை குறித்து தேர்தல் விதிமீறல் பிரிவு 126(1பி)-இன் கீழ் அறிக்கை.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெறுவதாக சித்தரித்து வெளியிடப்பட்ட வீடியோ காட்சிகள் தங்களது நிறுவனங்களில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆர்.கே. இடைத்தேர்தல் நாளை நடக்க உள்ள நிலையில், இது தேர்தல் விதிமீறல் பிரிவு 126(1பி)-இன் கீழ் அப்பட்டாமான தேர்தல் விதிமீறல் ஆகும்.

தேர்தல் நடப்பதற்கு 48 மணி நேரம் முன்னர் ஒளிபரப்பப்படும், வெளியிடப்படும் இது போன்ற காட்சிகள் தேர்தலில் வாக்குப்பதிவை பாதிக்கும்.

ஆகவே தாங்கள் வாக்குப்பதிவை பாதிக்கும் வகையில் இது சம்பந்தமான காட்சிகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒளிபரப்ப வேண்டாம். தேர்தல் விதியை மீறும் வகையில் நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம்.

-இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>