விநாயகர் சதுர்த்தி.. கடும் விதிமுறைகள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைப்பது மற்றும் ஊர்வலம் நடத்துவது தொடர்பான விதிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் செப்டம்பர் 13-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, வழிபாட்டுக்கு பின் நீர் நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.

இதற்காக தமிழக அரசு 24 விதிமுறைகளை வகுத்துள்ளது. பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க, காவல், தீயணைப்பு, உள்ளாட்சி மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.

சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயன பொருட்கள் கலந்த சிலையோ பிளாஸ்டர் ஆப் பாரிஸ் ரசாயன வண்ணங்களையோ பயன்படுத்தக்கூடாது

சிலை அமைக்கப்படும் பந்தல் எரியும் தன்மை உடையதாக இருக்க கூடாது

வெடிக்கும் தன்மை உள்ள பொருட்களை சிலை அருகே வைக்கக் கூடாது

வைக்கப்படும் சிலையின் உயரம் மேடையிலிருந்து பத்தடி தான் இருக்க வேண்டும்.

பள்ளிகள், மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் கட்டாயமாக சிலைகள் அமைக்க கூடாது

கூம்பு வடிவிலான ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது

காலை மற்றும் மாலை இரண்டு மணி நேரம் மட்டுமே ஒலிபெருக்கி வாயிலாக பாடல்களை ஒலிக்க வேண்டும்

சட்டவிரோதமாக மின் இணைப்பை ஏற்படுத்த கூடாது

சமூக அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் குறிப்பிட்ட மதங்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பக்கூடாது

விநாயகர் சிலை வைக்கப்பட்ட நாளிலிருந்து ஐந்து நாட்களுக்குள் கரைக்க வேண்டும்.

மசூதி, தேவாலயங்களை தவிர்த்து, வேறு வழிகளில் விநாயகர் சிலையை எடுத்துச் செல்ல வேண்டும்.

விநாயகர் சிலைகள் அமைக்கப்படும் இடங்களிலோ அதை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போது கட்டாயம் பட்டாசுகள் வெடிக்க கூடாது.

கடல் ஏரி குளங்களில் கரை ஒதுங்கும் சிலை கழிவுகளை உள்ளாட்சி துறையினர் 48 மணிநேரத்திற்குள் அகற்ற வேண்டும். என்பன உள்ளிட்ட 24 விதிமுறைகளை தமிழக அரசு வகுத்துள்ளது.

More News >>