மேட்டூர் அணை நீர்வரத்து கிடுகிடு உயர்வு: 1 லட்சம் கன அடியை எட்டியது

கனமழை எதிரொலியால், கர்நாடக அணைகளில் நிரம்பிய உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணை நீர்வரத்து 1 லட்சம் கன அடியை எட்டி உள்ளது.

கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக, கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் மீண்டும் மழை நீர் நிரம்பின. இதனால், அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால், நேற்று காலை கபினி அணையில் இருந்து 80 ஆயிரம் கன அடி தண்ணீரும், கே.ஆர்.எஸ்.அணையில் இருந்து 63 ஆயிரம் கன அடி தண்ணீரும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. மொத்தம் 1.43 லட்சம் கன அடி தண்ணீர் வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் அதிகளவில் திறந்துவிடப்பட்டுள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 70 ஆயிரம் கன அடியில் இருந்து இன்று 1 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது.

More News >>